என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    குடியாத்தம் நகராட்சி பகுதிகளுக்கு ஓரிரு நாட்களில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சிக்கு குடியாத்தம் அடுத்த பாலாற்றில் இருந்து ராட்சத கிணறுகள் மூலம் பசுமாத்தூர் நீரேற்று நிலையம் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடியாத்தம் நகராட்சி இணைக்கப்பட்டு குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா அருகே உள்ள ஹைதர்புரம் பகுதியில் ராட்சத குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் அதில் நிரப்பப்பட்டு அதன் மூலமாக பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடியாத்தம் நகராட்சிக்கு வந்தடைகிறது.

    தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடியாத்தம் நகராட்சிக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    அந்த தண்ணீர் சந்தைப்பேட்டையில் உள்ள ராட்சத தொட்டியில் நிரப்பப்பட்டு அங்கிருந்து குடியாத்தம் நகரில் உள்ள 8 சிறுசிறு குடிநீர் தொட்டிக்கு சென்று அதன் மூலமாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் இருந்தும் தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் குடியாத்தம் நகராட்சி சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பாலாற்றிலும், குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரி குடிநீர் கூட்டு திட்ட பைப்புகள் சேதமடைந்து அடித்து செல்லப்பட்டது.

    பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் குடிநீர் சப்ளை செய்யும் 3 ராட்சத கிணறுகளும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    நகராட்சியில் சிறு மின்விசை பம்புகள் மூலமாகவும், டிராக்டர்கள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது இருப்பினும் குடிநீர் தேவைக்காக குடியாத்தம் நகராட்சி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

    நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் இருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பைப்புகளை சீர்செய்து ஒரளவு குடிநீர் கடந்த சப்ளை செய்து வந்தனர் இருப்பினும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை.

    குடியாத்தம் நகராட்சி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விரைவாக கிடைக்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர் இதனைதொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவுண்டன்யமகாநதி ஆற்று வழியாக ஆற்றில் செல்லும் சேதமடைந்த காவிரி குடிநீர் கூட்டுக்குடிநீர் திட்ட பைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் தொடர்ந்து பள்ளிகொண்டா ஹைதர்புரம் பகுதியிலுள்ள கூட்டு குடிநீர் திட்ட சேதமடைந்த பைப்பகளையும் ஆய்வு செய்தனர்.

    குடிநீர் வாரிய அதிகாரிகள் பாலாற்றில் வெள்ளம் நின்றதால் போர்க்கால அடிப்படையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத பைப்புகளை பழுதை நீக்கி சீர் செய்து வந்தனர் இதனால் குடியாத்தம் பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் ராட்சத பைப்புகள் பழுது சரி செய்யப்பட்டது.

    மேலும் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாக செல்லும் சேதடைந்த பைப்புகள் சீரமைக்கப்பட்டது.

    காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்புகள் சீர்செய்யப்பட்டதை தொடர்ந்து குடியாத்தத்தில் நகராட்சி பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக நான்கு குடிநீர் தொட்டிகளுக்கு மட்டும் தண்ணீர் சப்ளையானது. இதனால் குடியாத்தம் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் கிடைத்தது. 

    மீதமுள்ள பகுதிகளுக்கான கவுண்டன்யமகாநதி ஆற்றின் வழியாகசெல்லும் ராட்சத பைப்புகளின் பழுதை சீர் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நகர்மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராசன், துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆட்டோமோகன், தேவகி கார்த்திகேயன், இந்துமதி கோபாலகிருஷ்ணன், ரேணுகாபாபு உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குடியாத்தம் நகரமன்ற தலைவர் சவுந்தரராசன் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-

    காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் சீரமைக்கும் பணிகள் கவுண்டன்யமகாநிதி ஆற்றில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    காவிரி தண்ணீர் 2 நாட்களில் குடியாத்தம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் குடியாத்தம் நகருக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் தண்ணீரை பொதுமக்கள் காய்ச்சியும், சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
    வெம்பாக்கம் அருகே வாகனம் மோதி டேங்க் ஆப்ரேட்டர் பரிதாபமாக இறந்தார்.
    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த வடமா வந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் 55 டேங்க் ஆப்ரேட்டர் இன்று அதிகாலை 5 மணி அளவில் தனது சைக்கிளில் நமண்டி கூட்டு சாலையில் நீர் வீட சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகிறார்கள்.
    ஆரணி அருகே பாத்திர கடையில் செல்போன் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மார்த்தா மற்றும் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா ஆகியோர் கண்ணமங்கலம் பகுதியில் தனியார் நர்சிங் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    மேலும் நேற்று காலையில் கண்ணமங்கலம் பஜார் வீதியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளனர்.

    அப்போது தங்களின் கையில் இருந்த செல்போனை அருகில் உள்ள டேபிளில் வைத்து விட்டு பொருட்களை எடுக்க சென்றுள்ளனர்.

    இதனை நோட்டமிட்ட டிப்டாப் ஆசாமி பொருட்கள் வாங்குவது போல் நடித்து செல்போனை திருடி சென்றுள்ளார்.

    பின்னர் செல்போன் காணாமல் போனது தெரிய வந்த நிலையில் மார்த்தா கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாத்திர கடையின் சிசிடிவி காட்சியை கொண்டு டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.
    652 நெசவாளர்களுக்கு ரூ.42 லட்சத்தில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அத்திமலைபட்டு கிராமத்தில் அறிஞர் அண்ணா பருத்தி பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகின்றன.

    இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    மேலும்  அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற நெசவாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அத்திமலைபட்டு கூட்டுறவு  சங்க செயலாளர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். 

    ஆரணி ஆர்.டி.ஓ. கவிதா, செய்யார் எம்.எல்.ஏ. ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட கைத்தறித் துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். 

    துணை சபாநாயகர்  கு.பிச்சாண்டி   கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி ஆகியோர்  பங்கேற்றனர்.

    முன்னதாக அமைச்சர் காந்தி குத்து விளக்கு ஏற்றி வைத்து அறிஞர் அண்ணா கைத்தறி சங்கத்தில் உள்ள பட்டுபுடவைகளை பார்வையிட்டு ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் தொழில் நுட்ப மேம்பாடு கீழ் 40 பயனாளிகளுக்கு ஜக்கார்டு இயக்க  எந்திரம் 240 ஊக்குகள் கொண்ட ஜக்கார்டு பெட்டி 90 பயனாளிகளுக்கு நூல் தறி சுற்றும் எந்திரம் 492 பயனாளிகளுக்கு ஜரிகை சுற்றும் எந்திரம் 20 பயனாளிகளுக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் கடன் உள்ளிட்ட 642பயனாளிகளுக்கு 41லட்சத்து 18ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி நெசவாளர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் ஆரணி டவுன் சேர்மேன் ஏ.சி மணி ஒன்றிய சேர்மன்கள் பச்சையம்மாள் சீனிவாசன் கனிமொழி சுந்தர் முன்னாள் எம்எல்ஏக்கள் சிவானந்தம் ஏ.சி தயாநிதி  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் அரசு அதிகாரிகள் நெசவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் துணிநூல் கட்டுப்பாடு அலுவலர் மேலாண்மை இயக்குனர் சத்தியபாமா நன்றி கூறினார்.
    செங்கத்தில் விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    புதுப்பாளையம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருவதை தடுக்கும் வகையில் பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் ஏற்பாட்டில் வாகன விபத்து குறித்து விழிப்புணர்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி வியாபாரிகளிடமும் ஆட்டோ வேன் கார் ஓட்டுனர்களிடமும் ஆசிரியர்களிடமும் விபத்து குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும் செங்கம் பகுதியில் விபத்து நடைபெறுவதற்கான காரணங்களையும் கேட்டறிந்தார். 

    பின்னர் மாணவர்கள் வியாபாரிகளிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு கூட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளவர்கள் எத்தனை நபர்கள் தலைக்கவசம் அணிந்து வந்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.

    முதலில் தலைக்கவசம் அணிந்து கொண்டு வாகனத்தை எடுத்துச் செல்லவும் சீட் பெல்ட் அணிந்துகொண்டு கார்களை இயக்கினாலே எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என கூறினார்.

    மேலும் பள்ளி மாணவர்கள் எக்காரணம் கொண்டும் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்லக் கூடாது எனவும் பெற்றோர்கள் மூலமாகவே பள்ளிக்கு பைக்கில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் 

    கூட்டம் முடிந்தபின் விபத்து குறித்து தனியார் திருமண மண்டபத்திலிருந்து புதிய பஸ் நிலையம் வரை தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும், அதிவேகப் பயணம் விபத்தில் முடியும், படியில் பயணம் நொடியில் மரணம், என்ற பதாகைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
    வெம்பாக்கம் ஜவுளி கடையில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம், 2வது புது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 61).  இவர் வெம்பாக்கம் மெயின் ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். 

    சம்பவத்தன்று கடையை ராமச்சந்திரன்  மூடிவிட்டு  சென்றார்.  வழக்கம் போல் மறுநாள் காலையில் கடையைத் திறந்தார். அப்போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.90 ஆயிரம், கண்காணிப்பு கேமரா மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது  தெரியவந்தது. 

    இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணரை வரவைத்து கைரேகைகளை பதிவு செய்தனர். மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

    திருடுபோன துணி கடை கடந்த ஜனவரி மாதம் தான் திறக்கப்பட்டது. தற்போது மேல்மாடி கட்டிட வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் திருடிய நபர் மேல்மாடி வழியாகச் சென்று கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றுள்ளார்.
    கோழிப் புலியூர் கிராமத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் கல்வி வட்டாரத்தில் 21 அரசு பள்ளிகளில் கற்றல் திறன் சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை சுகாதாரம் ஆகியவை குறித்து முப்பெரும் தொடக்க விழா சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

    பள்ளியின் தலைமையா சிரியர் தமிழரசி தலைமை தாங்கினார் ஆசிரியர் முரளி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு மாணவ& மாணவி களிடம் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். 

    மேலும் பள்ளியில் சுற்றுச்சூழல்அமைப்பு மூலம் சுமார் 40-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அமைப்பு விழாவை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். 

    மாணவரிடையே சுற்றுச்சூழல் குறித்து பாட்டு மூலம் பாட்டுப்பாடி மாணவர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் மற்றும் மரங்கள் மூலமாக மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் காற்று மாசுபடுவதை தடுப்பது ஆகியவை குறித்து விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் விமலி.ஆனந்தி.சத்யா. மற்றும் தொண்டு நிறுவன பொறுப்பாளர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நெடுங்குணம் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குணம் கிராமத்தில் உள்ள ராமச்சந்திர பெருமாள் கோவில் வளாகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடந்தது.

    சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் ஒன்றிய குழுதுணை தலைவர் லட்சுமி லலிதா வேலன் நெடுங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா வேலாயுதம். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் நெடுங்குணம்பிர்கா வருவாய் ஆய்வாளர் ஹேமலதா வரவேற்றார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் கலந்து கொண்டார். 

    இதில் பட்டா மாற்றம் உட்பிரிவு பட்டா பட்டா பெயர் திருத்தம் புதிய பட்டா உள்ளிட்ட பல்வேறு நில அளவை துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 52 பேர் மனு அளித்தனர்.

    இதில் உரிய ஆவணம் உள்ள 12 பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவியாக ஒன்றியக்குழு தலைவர் இந்திரா இளங்கோவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    முகாமில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை சமூக பாதுகாப்பு தாசில்தார் குமரவேல் மண்டல துணை தாசில்தார் சரவணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் நெடுங்குணம் கிராம நிர்வாக அலுவலர் பஷீர் நன்றி கூறினார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கால பைரவர் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்தக் குளம் அருகில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    பவுர்ணமியை அடுத்த 8&வது நாள் வரும் அஷ்டமி திதியில் மகா கால பைரவரை வணங்குவது மிகவும் விசேஷமானது என்று கருதப்படுகிறது.

    நேற்று தேய்பிறை அஷ்டமி தினம் என்பதால் இரவு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி காலபைரவருக்கு பச்சரிசிமாவு, அபிஷேக பொடி, மஞ்சள், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் முந்திரி மற்றும் வடை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

     ஸ்ரீ மகா கால பைரவருக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை செய்தனர்.

    அப்போது "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் துர்சக்திகள் விலகவும், எதிரிகளிடம் இருந்து வரும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றவும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பூசணிக்காய் தீபம் ஏற்றுவதால் கடன் மற்றும் பிரச்சினைகள் நீங்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஒரு பூசணிக்காயை இரண்டாக பிளந்து ஒரு பாதியில் மஞ்சளும், ஒரு பாதியில் குங்குமமும் வைத்து இலுப்பு எண்ணெய் ஊற்றி சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து காலபைரவர் முன்பு வைத்த சிகப்பு கயிறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
    தூசி போலீஸ் நிலையத்தில் 4 போலீசார் மட்டுமே உள்ளதால் புகார்கள் விசாரிக்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் 30 காவலர்கள் இருக்கவேண்டும். ஆனால் 4 போலீசார் மட்டும்தான் உள்ளனர். 

    இதனால் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் நிலுவையில் உள்ளது. தூசி போலீஸ் நிலையத்தின் கட்டுபாட்டில்  74 கிராமங்கள் உள்ளது.

    அதில் தூசி அருகே மாங்கால் கூட்டு சாலையில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் சிப்காட் தனியார் கம்பெனியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். 

    கல்லூரிகள் மற்றும் கம்பெனி உள்பட ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த வழியில் செல்கின்றன. 

    அடிக்கடி விபத்துக்கள் கிராமங்களில் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் அவர்கள் கொடுக்கும் மனுக்கள் 4 போலீசாரால் ஏதும் செய்யமுடியாமல் திணறுகின்றனர். புகார் மனுக்களும் நிலுவையில் உள்ளது. 

    தூசி போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் மனு கொடுக்க  வந்து செல்கின்றனர்.

    இதுகுறித்து உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதிக போலீசாரை தூசி போலீஸ் நிலையத்தில் நியமித்தால் பொதுமக்கள் பிரச்சனைகள் தீரும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சேத்துப்பட்டு அருகே பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள பெரணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேதமுனி இவரது மனைவி பூங்காவனத்தம்மாள் (வயது 47). அதே பகுதியை சேர்ந்த திருமலை (50) திருமலைக்கு திருமணம் ஆகவில்லை. 

    சம்பவத்தன்று பூங்காவன த்தம்மாள் பெரணம்பாக்கம் கிராமத்தில் உள்ள பால் சொசைட்டி நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த திருமலை பூங்காவனத்தம்மாளை வழிமறித்து ஆபாச வார்த்தை களால் திட்டி கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி  உள்ளார். 

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த பூங்காவனத்தம்மாளை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பூங்காவனத்தம்மாளின் மகன் அகிலன் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
    மருந்துக்கடைகளில் டாக்டர் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் எச்சரித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருட்களை அடியோடு ஒழிக்கும் நோக்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் தலைமையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதன் ஒரு பகுதியாக கடந்த 19-ந் தேதி திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் 5 கிலோ மீட்டருக்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

    பின்னர் கடந்த 22-ந் தேதி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை மாணவ &மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

    இதனை தொடர்ந்து நேற்று (24&ந் தேதி)  போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்துகளை வழங்க கூடாது என்றும், தனிப்பட்ட நபர்களுக்கு மொத்த விற்பனையில் மருந்துகளை வழங்க கூடாது என்றும், அங்கீகரிக்கப்படாத மருந்துகள் மற்றும் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார். 

    அப்போது திருவண்ணாமலை கிராமிய காவல் உட்கோட்ட டி.எஸ்.பி. அண்ணாதுரை மற்றும் சுகாதார துறை ஆய்வாளர் கோகிலா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
    ×