என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூசி போலீஸ் நிலையம்.
தூசி போலீஸ் நிலையத்தில் போலீஸ் பற்றாக்குறையால் புகார்கள் விசாரிக்க முடியாமல் தேக்கம்
தூசி போலீஸ் நிலையத்தில் 4 போலீசார் மட்டுமே உள்ளதால் புகார்கள் விசாரிக்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் 30 காவலர்கள் இருக்கவேண்டும். ஆனால் 4 போலீசார் மட்டும்தான் உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் நிலுவையில் உள்ளது. தூசி போலீஸ் நிலையத்தின் கட்டுபாட்டில் 74 கிராமங்கள் உள்ளது.
அதில் தூசி அருகே மாங்கால் கூட்டு சாலையில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் சிப்காட் தனியார் கம்பெனியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர்.
கல்லூரிகள் மற்றும் கம்பெனி உள்பட ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த வழியில் செல்கின்றன.
அடிக்கடி விபத்துக்கள் கிராமங்களில் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் அவர்கள் கொடுக்கும் மனுக்கள் 4 போலீசாரால் ஏதும் செய்யமுடியாமல் திணறுகின்றனர். புகார் மனுக்களும் நிலுவையில் உள்ளது.
தூசி போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் மனு கொடுக்க வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதிக போலீசாரை தூசி போலீஸ் நிலையத்தில் நியமித்தால் பொதுமக்கள் பிரச்சனைகள் தீரும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






