என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு ஏராளமானோர் மதுகுடிப்பதால் பாட்டில்கள் குவிந்துகிடக்கின்றன.
    திருவண்ணாமலை, 

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், விளையாட்டு மைதானம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. 

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், விளையாட்டு மைதானம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. 
    இதில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் எதிரில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமரும் வகையில் இரும்பு பென்ச்கள் மற்றும் அங்குள்ள மரங்களை சுற்றி சிமெண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

    இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அடுத்து உள்ள இறைவனின் சமையலறை அருகில் உள்ள சிமெண்டு இருக்கைகளில் மதுபான பாட்டில்களும், அதன் அருகில் தரையில் ஏராளமான மதுமான பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்பளர்களும் கிடக்கின்றன.

    மதுபிரியர்களுக்கு வசதி இதனை அந்த வழியாக காணும் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கே அந்த நிலையா என்று புலம்பிய படி செல்கின்றனர். இரவு நேரங்களில் மதுபிரியர்கள் சிலர் அமர்ந்து மது அருந்துவதற்கு  வசதியாக உள்ளதால் இங்கு வந்து மது அருந்திவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. 

    இதே நிலை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகமே மதுபிரியர்களின் கூடாரமாகவே மாறிவிடும். எனவே இதனை தடுக்க 

    இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இரவு நேரங்களில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
    திருவண்ணாமலை மாவட்டம்– பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளை கையாள்வது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
    சேத்துப்பட்டு,

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள ஆவணியாபுரம், பெரணமல்லூர், வல்லம், பெரிய கொழப்பலூர், நெடுங்குணம், கோட்டுபாக்கம், ஆகிய 6 உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கையாளுவது குறித்து கணினி மூலம் 2-ம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது. 

    இதில் பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 76 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமை வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், ஆகியோர் நேரில் சென்று பயிற்சியை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராசா, ஆசிரியர் பயிற்றுனர்கள் செண்பகவள்ளி, சரவணராஜ், விஜயலட்சுமி, இசையருவி, சுகந்தி, மொளுகு, ஆகியோர் உடன் இருந்தனர்.
    திருவண்ணாமலை சித்திரை வசந்த உற்சவ விழாவில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருவண்ணாமலை

    அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்  நடந்து வருகிறது. நேற்று அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளினார். 3-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மகிழ மரத்தை சுற்றி 10 முறை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு எம்.ஆர்.பி. செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு எ–ம்.ஆ–ர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டும் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட சேர்ந்த செவிலியர்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு எம்ஆர்பி மூலம் பணிக்கு வந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரேம் குமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி சிறப்புரை ஆற்றினார் முடிவில் பொருளாளர் நந்தினி நன்றி கூறினார்.
    ஆரணியில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
    ஆரணி:

    ஆரணி டவுன் சைதாப்பேட்டை வீரபத்திரர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். கட்டிட மேஸ்திரி. 

    இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் சந்துரு, ராஜேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சங்கீதா பல நாட்களாக உடல் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த சங்கீதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனைகண்ட அக்கம்பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி சங்கீதா பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கே.கே.நகர் பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் சொந்த இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெறறு வருகின்றன.

    மேலும் குடியிருப்பு பகுதியில் செல்போன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்கும் இடத்திற்கு வந்து செல்போன் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தகலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் சிறிது நேரம் குடியிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.
    அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபாத்திர அபிஷேகம் தொடங்கியது.
    திருவண்ணாமலை:

    அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபாத்திரம் அபிஷேகம் இன்று தொடங்கியது. வரும் 28-ந் தேதி வரை நடக்கிறது.

    இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு தாரா அபிஷேகம் தொடங்கப்பட்டது. சிவலிங்கத்திற்கு மேல் செப்புப் பாத்திரத்தை தொங்கவிட்டு அதில் பன்னீர் சந்தனம் ஊற்ற­ப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

    இதே போன்று கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார், அடி அண்ணாமலை கோவில் மற்றும் அஷ்டலிங்கத்திற்கும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டுள்ளது. 
    போளூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வேலூர்- சித்தூர் சாலையில் போளூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.

    போளூர் சுற்றுவட்டார கிராமங்களில் அனைத்து விவசாயிகளும் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தான் அறுவடை செய்த நெல்லை கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரும் நெல்லை பல நாள் காத்திருந்து விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அதே போல் இன்று காலை சுமார் 6 மணி அளவில் விவசாயிகள் கொண்டு வந்த நிலை சரியாக எடை போடாமல் இடையில் முறைகேடு செய்வதும் உள்ளூர் விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளை அழைப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    அதிகாரிகளுடன் எவ்வளவும் விவசாயிகள் முறையிட்டும் கண்டுகொள்ளாததால் இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போளூர் விவசாய சங்கத் தலைவர் பார்த்திபன் தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சித்தூர் டு வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சுமார் 8 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    அரை மணி நேரம் நீடித்த இந்த சாலைமறியலில் போளூர் காவல்துறையினருக்கு தகவல் அறிந்து உடனே விரைந்து வந்து விவசாயிகளிடம் அதிகாரியிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் மறியலை கைவிடுங்கள் என்று கூறினர்.

    ஆனால் விவசாயிகள் மறியலை கைவிடுவதாக இல்லை உடனே காவல்துறையினர் போளூர் கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம் சங்கர் போன்றவர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சூப்பிரண்டு தாமோதரன் இடம் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இதுபோல் தவறு நடக்காது என்று உறுதி கூறினர்.

     பிறகு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பருவதமலை கோவிலில் திருட்டை தடுக்க 3 புதிய நவீன உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், கடலாடி ஆகிய ஊராட்சிக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சுமார் 4560 அடி உயரமுள்ள மூலிகை செடி கொடி மரங்கள் நிறைந்த பருவதமலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் உள்ளது. 

    இங்குள்ள சாமி தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு பவுர்ணமி, அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களிலும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். 

    பக்தர்களின் காணிக்கை செலுத்தும் வகையாக கோவிலில் உண்டியல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த உண்டியலை மர்ம நபர்கள் அறிந்து உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி செல்கலும் சம்பவம் தொடந்து நடந்து வருகிறது. 

    இதனை தடுக்கும் வகையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய நவீன வகையில் உள்ளதாக உருவாக்கப்ப ட்டுள்ளது. 3 உண்டியல்கள் மலைமீது எடுத்து சென்று கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
    ஆரணி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரம் பொருட்கள் திருடி சென்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் கடலூர் சித்தூர் சிசி சாலையில் மளிகை கடை நடத்தி வருகின்றார்.

    மேலும் வழக்கம் போல் நேற்று இரவு வேலை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். மீண்டும் இன்று காலை மளிகை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது ரூ. 25 ஆயிரம், மளிகை பொருட்கள் திருடு போனது தெரிய வந்தன.

    சம்பவம் குறித்து மளிகை கடை உரிமையாளர் மணி கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    செய்யாறு அருகே குளவி கொட்டி மூதாட்டி பலியானார்.
    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள வடதின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன், இவரது மனைவி ஜெயா (வயது 60), விவசாய கூலி வேலை செய்து வருகிறார். 

    இவர் கடந்த 25ம்தேதி வீட்டுக்குப் பின்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த குளவிகள் ஜெயாவை முகம், தலை, கால் ஆகிய பல இடங்களில் கொட்டி விட்டன. 

    குளவி கொட்டியதால் உடலில் பல இடங்களில் வீக்கமடைந்து, வலியால் ஜெயா துடித்தார். அவரது மகன் சேட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்நேசை பலனின்றி இறந்தார். 

    இது சம்பந்தமாக அனக்காவூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    செய்யாறு அருகே பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த திருப்பனங்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயன்( வயது 32), இவர் கேட்டரிங் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

     இவரது மனைவி சுகுணா (30), குழந்தை காமேஸ்வரன் அழைத்துக்கொண்டு நேற்று மாமியார் வீடான பாப்பாந்தாங்கள் கிராமத்திற்குச் சென்றார், பின்னர் இரவு சுமார் 10 மணி அளவில் திருப்பனங்காடு செல்வதற்காக சுமங்கலி வழியாக குளம் அருகே வந்து கொண்டிருந்தார்.

    இவர்கள் பின் தொடர்ந்து  வந்த 3 பேர் விஜயன் ஓட்டிச்சென்ற பைக் மடக்கி கொள்னை கும்பலின் ஒருவன்பெண்ணிடம் கத்தியைகாட்டி மிரட்டி கழுத்தில் இருந்த 6 பவுன் தாலியை செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

     தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர்சம்பவ இடம் சென்று விசாரணை செய்தனர்.

     கடந்த 2 மாதங்களில் டாஸ்மாக் ஊழியரிடம் 3 லட்சமும், அதேபோன்று தாயும் மகளிடமிருந்து 11 ½ சவரன் நகை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

    தொடர்ந்து இதுபோன்று வழிப்பறி கொள்ளை சம்பவம் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
    ×