என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்தப்படம்.
    X
    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்தப்படம்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு எம்.ஆர்.பி. செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு எ–ம்.ஆ–ர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டும் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட சேர்ந்த செவிலியர்கள் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு எம்ஆர்பி மூலம் பணிக்கு வந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரேம் குமாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி சிறப்புரை ஆற்றினார் முடிவில் பொருளாளர் நந்தினி நன்றி கூறினார்.
    Next Story
    ×