search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரணமல்லூரில் குழந்தைகளை கையாள்வது குறித்து பயிற்சி முகாம்.
    X
    பெரணமல்லூரில் குழந்தைகளை கையாள்வது குறித்து பயிற்சி முகாம்.

    திருவண்ணாமலை மாவட்டம்– பெரணமல்லூர் வட்டார வள மையம் மாற்றுத்திறன் குழந்தைகளை கையாள்வது குறித்து பயிற்சி முகாம்

    திருவண்ணாமலை மாவட்டம்– பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளை கையாள்வது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
    சேத்துப்பட்டு,

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள ஆவணியாபுரம், பெரணமல்லூர், வல்லம், பெரிய கொழப்பலூர், நெடுங்குணம், கோட்டுபாக்கம், ஆகிய 6 உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கையாளுவது குறித்து கணினி மூலம் 2-ம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது. 

    இதில் பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 76 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமை வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், ஆகியோர் நேரில் சென்று பயிற்சியை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராசா, ஆசிரியர் பயிற்றுனர்கள் செண்பகவள்ளி, சரவணராஜ், விஜயலட்சுமி, இசையருவி, சுகந்தி, மொளுகு, ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×