search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீண்டாமை  சுவரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    தீண்டாமை சுவரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

    • தனியாா் வீட்டுமனைப் பிரிவு சாா்பில் தீண்டாமை சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
    • 18க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூா் அருகே அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெருமாநல்லூா் நான்கு வழிச் சாலை சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் கூறியதாவது: - ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட முட்டியங்கிணறு ஆதிதிராவிடா் காலனியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தனியாா் வீட்டுமனைப் பிரிவு சாா்பில் தீண்டாமை சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவற்றை ஒட்டிய பகுதியில் தனியாா் வீட்டுமனைப் பிரிவின் சாக்கடை நீா் வெளியேறுவதால் 18க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன.

    இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக தீண்டாமைச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமானவா்கள் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றனா். இந்தப் போராட்டத்தில் பொறுப்பாளா்கள் ஏ.பி.ஆா். மூா்த்தி, தமிழ்வேந்தன், பழ.சண்முகம், ரேவதி, பட்டுரோஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×