search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மியம்மாள், ஸ்ரீ வெள்ளையம்மாள் தரிசனம் செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.  

    உடுமலை மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • 50 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது.
    • முதல் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், அனுக்ஞை, கலசபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை நடைப்பெற்றது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 4-வது வார்டு யு.எஸ்.எஸ் காலனியில் புகழ்பெற்ற 50 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து முதல் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ,அனுக்ஞை,கலசபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை நடைப்பெற்றது. இன்று அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம் , திரவ்யாஹூதி,பூர்ணாஹூதி ,யாத்ராதனம் நடைபெற்றது.

    ஆலய வலம் வந்த உடன் உடுமலை ஐயப்பன் கோவில் சிவத்திரு சசிதரகுருக்கள் , சுந்திரமூர்த்தி சிவம் தலைமையில் திருச்செந்தூர் ,கொடுமுடி ,கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவில் ,திருமூர்த்திமலை ,சபரிமலை,சேத்துமடை தேவி காளியம்மன் கோவில் ஆகிய பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசம் மீது ஊற்றப்பட்டு மதுரைவீரன் சாமி,பொம்மியம்மாள் ஸ்ரீ வெள்ளையம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பு வழிபாட்டுடன் நடைப்பெற்றது. பின்னர் புனித நீர் திரளான பக்தர்கள் மீது தெளிக்கபட்டது.

    Next Story
    ×