search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    மாரியம்மன் அலங்காரத் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

    உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலையின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனையும் அஷ்டதிக் நாகர்களையும் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

    உடுமலை:

    ஆடி வெள்ளியை முன்னிட்டு உடுமலையின் காவல் தெய்வமான மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு மஞ்சள், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால் தயிர், பன்னீர், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மாலை 6 மணிக்கு சிறப்பு யாகத்துடன் வாசுகி, குளிகன், தட்சகன், பத்மன், கார்கோடகன், மகாபத்மன், அனந்தன், சங்கபாலன், நாகர்களுக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனையும் அஷ்டதிக் நாகர்களையும் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    முன்னதாக பக்தர்கள் திரிசூலத்திற்கு எலுமிச்சைகனியையும் பலிபீடத்திற்கு கல்உப்பு சாற்றியும் விளக்கு ஏற்றியும் வழிபட்டனர்.

    Next Story
    ×