என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பல்லடம் கடைவீதியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 60 ஆயிரம் திருட்டு
- பொருட்கள் வாங்க பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார்.
- கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சம்பவத்தன்று பல்லடத்தில் உள்ள அரசு வங்கியில் ரூ.60 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு, அதனை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துள்ளார்.
பின்னர் பொருட்கள் வாங்க பல்லடம் கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடையின் முன்பு நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதையடுத்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் கடைவீதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






