என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 4 லட்சம் திருட்டு
    X

    கோப்புபடம்.

    வெள்ளக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 4 லட்சம் திருட்டு

    • காய்கறிகளை வாங்கி கொண்டு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
    • வங்கியில் இருந்து ரூ. 4 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கம்பளியம்பட்டி, அரண்மனைபுதூரை சேர்ந்த பழனிச்சாமி மகன் விஜயராஜ் (வயது 60) ,விவசாயி. இவர் நேற்று வியாழக்கிழமை பகல் 12 மணி அளவில் வெள்ளகோவிலில் திருச்சி -கோவை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து தனது தேவைக்காக ரூ. 4 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு அதை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். பின்பு தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு காய்கறி கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்கி கொண்டு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காங்கேயம் போலீஸ் துணை டி.எஸ்.பி பார்த்திபன் மற்றும் போலீசார் வெள்ளகோவிலில் திருட்டுப் போன இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

    அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும் விஜயராஜ் கடைக்குச் சென்று திரும்புவதற்குள் அவரது மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தில் இன்னும் 2 நபர்கள் கூடுதலாக விஜயராஜை வங்கியில் இருந்து பின்தொடர்ந்து வந்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து பணத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×