என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
அக்ரஹாரப்புத்தூர் பகுதி பொதுமக்கள் ஜூன் மாத மின் கட்டணத்தையே செலுத்த வேண்டுகோள்
- ஜூன் மாத மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
- மின் கணக்கீடு நடக்கவில்லை.
மங்கலம் :
மங்கலம் அருகேயுள்ள அக்ரஹாரப்புத்தூர் பிரிவு அலுவலகத்தில் சில கிராம மக்கள் ஜூன் மாத மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து செயற்பொறியாளர் சபரிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமனூர் கோட்டம் அக்ஹாரப்புத்தூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், வேட்டுவபாளையம், மலைக்கோவில், உப்பிலிபாளையம் பகுதிகளில் தவிர்க்க இயலாத காரணத்தால் மின் கணக்கீடு நடக்கவில்லை.
இப்பகுதி மக்கள் ஜூன் மாதம் செலுத்திய கட்டணத்தையே இம்மாத கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story






