search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.344.36 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
    X

    திட்டப்பணிகளை ஆய்வு செய்த காட்சி.

    ரூ.344.36 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

    • குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.344.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.45.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.344.36 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.45.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாநகராட்சி பாண்டியன் நகரில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டி, சினேகா நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், டவுன்ஹாலில் ரூ.54.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநாட்டு அரங்கம் என மொத்தம் ரூ.389.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் , துணை ஆணையர் பாலகிருஷ்ணன்,மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் கண்ணன், வாசு, திருப்பூர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ் மற்றும் தொடர்புடைய அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×