search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறிக்கான இலவச மின்சாரம் அறிவிப்பால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி
    X

     சுல்தான்பேட்டை ஆர்.கோபால்.

    விசைத்தறிக்கான இலவச மின்சாரம் அறிவிப்பால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி

    • ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் .

    மங்கலம் :

    விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

    இந்த அறிவிப்பு குறித்து மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் -கூறுகையில்

    தமிழகத்தில் மார்ச்1-ந்தேதி முதல் விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அந்த வகையில் விசைத்தறிக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்பட்டு ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டு இருப்பதால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்/ மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 750 யூனிட்டாக இருந்த நிலையில் 1000 யூனிட்டாக உயர்த்தியும் ,கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பதை 300 ஆக உயர்த்தியும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் ஜவுளித்தொழிலில் நெருக்கடி குறைந்து விரைவில் நல்ல நிலைக்கு வரும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் குறைப்பு மற்றும் விசைத்தறிக்கான 1000 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி , செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மேலும்திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் மா.சிவசாமி கூறுகையில்,இதன் மூலம் விசைத்தறித் தொழில் நல்ல நிலையில் சீரடைந்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

    Next Story
    ×