என் மலர்
உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் பொதுமக்கள் அறிவிப்பு
- கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலை உரிமம் முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பி க்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17ந் தேதி முதல் கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப ட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 8-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்ட பந்தலில், அப்பகுதி மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர். இந்த நிலையில் நேற்று 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story






