search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் களையிழந்த தேங்காய் ஏலம்
    X

    கோப்புபடம். 

    மழையால் களையிழந்த தேங்காய் ஏலம்

    • விற்பனை கூடத்திற்கு 430 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • அதிகபட்சமாக ஒரு கிலோ 82.85 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.82.85 க்கும் ஏலம் போனது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு சனிக் கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இதனை முத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி தாங்கள் விளைவித்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை காரணமாக இந்த வாரம் 3 விவசாயிகள் தேங்காயும், 2 விவசாயிகள் தேங்காய் பருப்பும் கொண்டு வந்திருந்தனர்.

    விற்பனை கூடத்திற்கு 430 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ 22.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 21.40 ரூபாய்க்கும், சராசரி 21.80 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 ஆயிரத்து 400 க்கு ஏலம் போனது. இது போல வாரந்தோறும் நடைபெறும் கொப்பரை ஏலத்தில் 350 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 82.85 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.82.85 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.29 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. இந்த ஏலத்தில் 2 விவசாயிகள் பங்கேற்றனர்.

    வழக்கமாக இங்கு நடைபெறும் ஏலத்திற்கு குறைந்தது 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேங்காய் உரிக்க முடியாமலும், தேங்காய் பருப்புகளை வெயிலில் காயவைக்க முடியாத காரணத்தால் 5 விவசாயிகள் மட்டும் ஒழுங்குமுறை கூடத்திற்கு விற்பனை செய்ய வந்திருந்தனர்.

    Next Story
    ×