search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறு அறிவிப்பு வரும் வரைஉயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தமாட்டோம்- விசைத்தறியாளர்கள் அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    மறு அறிவிப்பு வரும் வரைஉயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தமாட்டோம்- விசைத்தறியாளர்கள் அறிவிப்பு

    • பல லட்சம் விசைத்தறி தொழில் சார்ந்த தொழிலாளர் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும்.
    • மின்துறை அமைச்சரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.

    மங்கலம்:

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சாதாரண விசைத்தறிக்கு மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கக்கோரி கோவை, திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பு முடிவின்படி கடந்த கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., முயற்சியால் தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை கோவை, திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து சாதாரண விசைத்தறிக்கு உயர்த்தியுள்ள கட்டணத்தை குறைத்து வழங்கி விசைத்தறி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தினோம்.

    மின்துறை அமைச்சரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். மின்துறை அமைச்சர் உறுதியின் பேரில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. உயர்த்தியுள்ள மின்கட்டணத்தை மறு அறிவிப்பு வரும் வரை செலுத்துவதில்லை என்றும், விசைத்தறியாளர்களுக்கு நல்லதோர் மறுஅறிவிப்பு வரும் வரை தமிழக மின்சார வாரியம் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்காமல், விசைத்தறியாளர்களையும், பல லட்சம் விசைத்தறி தொழில் சார்ந்த தொழிலாளர் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×