search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

    • அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும்.

    அவிநாசி:

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம், சேவூர் அருகேயுள்ள மங்கரசவளையபாளையம் பகுதியில் நடந்தது.மாநில தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அவிநாசி தலைவர் வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, ராஜகோபால் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    அரசே தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையாக, மாட்டுப்பால் லிட்டருக்கு, 60 ரூபாய், எருமைப்பால், லிட்டருக்கு 80 ரூபாய் உயர்த்த வேண்டும்.100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை, விவசாய பணிக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும். தென்னை, பனை விவசாயிகளின் நலன் கருதி கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×