search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில்  வடமாநிலத் தொழிலாளா்கள் அச்சமின்றி பணியாற்ற அதிமுக துணை நிற்கும் - பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு
    X

    கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ பேசிய போது எடுத்த படம்.

    தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் அச்சமின்றி பணியாற்ற அதிமுக துணை நிற்கும் - பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

    • விஜயகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • விபிஎன்.குமார், எஸ்.எம்.பழனிசாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன்எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

    அவைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ பேசியதாவது:-

    வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும். அதற்கு எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி அதிமுக நிர்வாகிகள் துணைநிற்போம். வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தஒரு இடைஞ்சல் ஏற்பட்டாலும் அதை போக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும். யார் வதந்தியை பரப்பினாலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகாலத்தில் அம்மா அவர்களின் ஆட்சியிலும், எடப்பாடியாரின் ஆட்சியிலும் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட வதந்தி கிளப்பினால் தொழிலாளர்கள் முதல் தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். யார் இதை செய்தாலும் கண்டிக்கத்தக்கது. இன்றைக்கு இந்தியாவுக்கே வேலை தரும் அளவுக்கு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதற்கு காரணம் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி தான். ஈரோடு தேர்தல் அதிமுகவிற்கு பின்னடைவு அல்ல. அதிமுக எடப்பாடியாரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடியார் தான் நிரந்தர பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் கைவிடப்பட்டதை போல, விரைவில் இந்த திமுக அரசு 100 யூனிட் இலவச மின்சாரத்தை கைவிட தான் இந்த பணிகளை செய்து வருகிறது. மின்சார கட்டணத்தை ஏற்கனவே உயர்த்தி விட்டார்கள். தண்ணீர் வரி, வீட்டு வரி உயர்த்தி விட்டார்கள். இதனால் வீட்டு வாடகை உயர்ந்திருக்கிறது. திமுகவின் செயலாளர் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார். கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கழக நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, தம்பி மனோகரன், , எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, கருணாகரன் ,ரத்தினகுமார், திலகர் நகர் சுப்பு, பாசறை சந்திரசேகர், ஹரிஹரசுதன் சுதன், விபிஎன்.குமார், எஸ்.எம்.பழனிசாமி, ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×