search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ந்தேதி சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு: திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்  - சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிகளில் குவியும் பொதுமக்கள்
    X

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக குவிந்த பொதுமக்கள்.

    10-ந்தேதி சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு: திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் - சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிகளில் குவியும் பொதுமக்கள்

    • மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    திருப்பூர்:

    காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில், வரும், 10ந்தேதி, மெகா மருத்துவ முகாம் நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான, 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.

    பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன், அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கி றது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்க ளுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும், 10ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று, அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.

    Next Story
    ×