என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
காங்கயத்தில் தொழிலாளி போக்சோவில் கைது
- 20 வயதான இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அடுத்துள்ள கல்லெறி என்ற ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
- திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி சதிஷ்குமார்(40) அங்கு தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
காங்கேயம்:
காங்கேயம் அருகேயுள்ள பாப்பினி கிராமத்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அடுத்துள்ள கல்லெறி என்ற ஊரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி சதிஷ்குமார்(40) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து அவர் பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சதிஷ்குமார் தலைமறைவானார்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் வெள்ளகோவில் அருகேயுள்ள முத்தூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சதிஷ்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






