search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னை விவசாயிகளிடம் இருந்து  கொப்பரை தேங்காய் கொள்முதல்
    X

    கோப்புபடம். 

    தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல்

    • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களது வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயனடையும் வகையில் அவா்கள் விளைவித்த கொப்பரையை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கூடுதலாக 6,600 மெட்ரிக் டன் அரவை கொப்பரை, 400 மெட்ரிக் டன் பந்து கொப்பரை ஆகியவற்றை கொள்முதல் செய்ய நவம்பா் 26-ந் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேங்காய் கொப்பரை கிலோ ரூ.108.60, பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலமாக கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு விவரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் தமிழக அரசின் இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×