search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் சேவை-  அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    கோப்புபடம். 

    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் சேவை- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • தாராபுரம் அரசுமருத்துவமனைக்கு ஒரு 102 ஆம்புலன்ஸ் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
    • பிரசவித்த தாய்மார்கள் வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர்.

    தாராபுரம்:

    தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் 102 ஆம்புலன்ஸ் தாய் சேய் நல இலவச சேவையை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-

    பிரசவ சிகிச்சை முடிந்து தாய்மார்கள் வீடு திரும்புவதற்காக தாய் சேய் நல சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஒரு 102 ஆம்புலன்ஸ் தமிழக அரசால் வழங்கப்பட்டது. மருத்துவமனையில் இந்த ஆம்புலன்ஸ் பயன்பாட்டில் இருக்கும். அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களையும், குழந்தைகளையும் கொண்டு விடவும் மறு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போட வரும் தாய் சேய் ஆகியோரை மருத்துவமனையில் இருந்து இல்லங்களுக்கு அழைத்து செல்வதற்கும் இலவச வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த வாகனத்தை பயன்படுத்த 102 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும்.அப்போது அரசு மருத்துவமனையில் இருந்து இந்த வாகனம் அனுப்பி வைக்கப்படும். பிரசவித்த தாய்மார்கள் வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுவர். இந்த வாகனத்தில் குழந்தைகளுக்கான ஒரு தொட்டில் தாய் உறவினர்கள் அமர்ந்து செல்லும் வகையில் 7 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசவித்த தாய்மார்களை இல்லங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு மட்டுமின்றி பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அழைத்து சென்று வரவும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×