search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலுமிச்சைக்கு நிலையான விலையால்  விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம். 

    எலுமிச்சைக்கு நிலையான விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்யலாம்.
    • எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்கிறது.

    உடுமலை

    உடுமலை சுற்றுப்புற பகுதியில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடியும் நடைபெற்று வருகிறது.ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ராஜகனி என்று அழைக்கக்கூடிய எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரையில் ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடவு செய்யலாம். செடிவகை சமதளபரப்பிலும் கொடிவகை மலைப்பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.நடவு செய்த நாளில் இருந்து 3- ம் வருடம் அறுவடைக்கு தயாராகி விடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது. வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை தன்னகத்தே கொண்ட எலுமிச்சை பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டைவலியை போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப்பிரச்சனையை தீர்க்கும் வல்லமை பெற்றது.அதுமட்டுமின்றி வயிற்று உபாதைகள், நெஞ்சு எரிச்சல், வாயுவை அகற்றி பசியை உண்டாக்கும் சிறந்த கிருமி நாசினியாகவும் திகழ்கிறது.

    மேலும் கோடை காலத்தில் எலுமிச்சைசாறுடன் உப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது.இதனால் பொதுமக்களும் எலுமிச்சையை விரும்பி உணவில் பயன்படுத்தி வருவதால் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றோம். எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×