search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
    X

    அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்

    அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

    • அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மற்றொரு தரப்பினர் குறிப்பிட்ட தேதியில் கும்பாபிசேகம் நடைபெறும் வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த நிலையில் வரும் 8-9-2022 அன்று உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில், கரியகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கும் கும்பாபிஷேக விழா நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு தரப்பினர், ஆகம விதிகளுக்கு மாறாக அம்மன் சிலை உள்ளதாகவும், அதனை சரியான முறையில் வைத்து, கோவிலின் பழமையான முறைகள் மாறாமல் கும்பாபிசேகவிழா நடத்த வேண்டுமென கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.இதற்கு மற்றொரு தரப்பினர் குறிப்பிட்ட தேதியில் கும்பாபிசேகம் நடைபெறும் வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    Next Story
    ×