search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு - அரங்கு அமைக்கும் பணியை கலெக்டர், மேயர் ஆய்வு
    X

    சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு - அரங்கு அமைக்கும் பணியை கலெக்டர், மேயர் ஆய்வு

    • 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
    • கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி சார்பில் வரும் 11ம் தேதி, திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியிட ங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இதில் கலந்து கொண்டு தங்கள் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்காக வெளியிடப்பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    பள்ளி மற்றும் கல்லுாரி களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், வேலை தேடுவோர் மற்றும் தங்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தேடுவோர் பதிவு செய்து, பங்கேற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் குறித்து பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலை தளங்களில் இந்த முகாம் குறித்து மேயர், கலெக்டர், கமிஷனர் ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பதிவுகள் வைரலாகி வருகிறது.

    முகாமுக்கான அரங்குகள் அமைக்கும் பணியை மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார். சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    Next Story
    ×