search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதிகள் குறித்து திருப்பூர் பஸ் நிலையத்தில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு
    X

    அடிப்படை வசதிகள் குறித்து திருப்பூர் பஸ் நிலையத்தில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு

    • பேருந்து நேரம், சுகாதாரம், கழிவறை சுகாதாரம், போக்குவரத்து குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
    • பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பேருந்து நேரம், சுகாதாரம், கழிவறை சுகாதாரம், போக்குவரத்து குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்குள் குறைகள் ஏதாவது உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து தாடிக்காரர் முக்கு, மாட்டுக் கொட்டகையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை குறித்து பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெற்று வரும் தண்ணீர் தொட்டி பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கவுன்சிலர் கண்ணப்பன், மாநகராட்சி உதவி ஆணையர் வாசுகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அருகில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டார்.

    Next Story
    ×