என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தொழிலுக்கு இடையூறு செய்வதை கண்டித்து கல்குவாரிகள் தொழிலாளர்கள் போராட்டம்
  X

  கோப்புபடம்.

  தொழிலுக்கு இடையூறு செய்வதை கண்டித்து கல்குவாரிகள் தொழிலாளர்கள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்குவாரிகளில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்க சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
  • கல்குவாரி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

  பல்லடம் :

  பல்லடம் கல்குவாரி தொழிலுக்கு இடையூறு செய்வதை கண்டித்து இன்று முதல் காரணம்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில்:- திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் கல்குவாரி தொழில்களை நலிவடைய செய்யும் வகையில் இயங்கி வருபவர்களை கண்டித்து இன்று மற்றும் நாளை 13 ந்தேதி (செவ்வாய்க்கிழமை ) ஆகிய 2 நாட்களும் திருப்பூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக கல்குவாரிகளில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி வைக்க சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

  மேலும் இன்று சங்க உறுப்பினர்களின் லாரி, டிப்பர் வாகனங்களை காரணம்பேட்டையில் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தி வைக்கவும், கல்குவாரி தொழிலாளர்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து கல்குவாரி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.அதன் பின்பு நாளை மாநில சங்கத்தலைவர் கே.சின்னச்சாமி தலைமையில் காரணம்பேட்டையில் சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் அனைத்து உறுப்பினர்களும், தொழிலாளர்களும் குடும்பத்துடன் பங்கேற்கும் உண்ணாவிரதம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. அதில் சங்க உறுப்பினர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டட கட்டுமான தொழிலாளர்கள், தொழில் துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவு தர வேண்டுகிறோம். சங்கத்தின் மூலம் 2 நாட்கள் நடைபெற உள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க அமைப்புகளும், கல்குவாரி தொழில் சார்ந்த அனைத்து அமைப்புகளும், ஆர்.எம்.சி. உரிமையாளர்களும், மற்றும் அனைத்து மாவட்டத்தில் உள்ள கல் குவாரி மற்றும் கிரசர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் .இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டம் வெற்றி அடைய அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Next Story
  ×