என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
அவினாசியில் தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
- திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்ற மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது.
- பெண் பஸ்சை விட்டு இறங்க மறுத்து தெக்கலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவினாசி :
திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்ற மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அதில் ஏறிய ஒரு பெண் தெக்கலூருக்கு டிக்கட் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் தெக்கலூரில் பஸ் நிற்காது என்று கூறியதாகவும் இதனால் அந்த பெண்ணுக்கும் கன்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த பெண் டிக்கெட் எடுப்பதற்காக கொடுத்த பணத்தை தூக்கிவீசியதாக கூறப்படுகிறது.
எனவே அப்பெண் பஸ்சை விட்டு இறங்க மறுத்து தெக்கலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி தெக்கலூர்பைபாஸ் ரோட்டில் நின்று அந்த பஸ்சை நிறுத்தி சிறைபிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் கன்டக்டர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் பஸ் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






