search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது

    • காலை 11 மணியளவில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
    • ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2022 அன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொதுஇடங்களில் நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2022 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும்.

    கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்ப்பட்ட 265 கிராம ஊராட்சிகளிலும் மேற்படி கூட்டப்பொருட்கள் குறித்து 2.10.2022 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, கிராம பொது மக்கள் மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×