search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழியாறு- ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் நாளை விவசாயிகள் பேரணி
    X

    விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர். 

    ஆழியாறு- ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் நாளை விவசாயிகள் பேரணி

    • 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.
    • 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.

    பல்லடம் :

    ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்த்தை ரத்து செய்ய கோரி திருப்பூரில் விவசாயிகள் பேரணி நாளை நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பல்லடம் வட்டார தலைவர் வேலுமணி கூறியதாவது:-பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் மூலம் பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை,பல்லடம்,உள்ளிட்ட பல்வேறு தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்திற்கும்,பொதுமக்களுக்கு குடிநீராகவும் பயனளிக்கும் திட்டம்.

    இங்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.ஏற்கனவே பி.ஏ.பி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. இந்தநிலையில் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுப்பதால் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் மேலும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

    எனவே அந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், நாளை 21-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற உள்ளது. திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டி பிரிவில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×