search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் ஊக்கத்தொகை பெற நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்
    X

    கோப்புபடம்.

    விவசாயிகள் ஊக்கத்தொகை பெற நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்

    • வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ.2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    விவசாயிகள் ஊக்கத்தொகை பெற நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து வெள்ளகோவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி கூறியிருப்பதாவது:-

    பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வருடத்தில் 3 தவணைகளாக தலா ரூ.2ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் வட்டாரத்தில் இத்திட்டத்தில் 3,920 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது.இனி வரும் காலங்களில் அடுத்த தவணை வழங்க பயனாளிகளின் நில உடைமைகளை சரிபார்க்க அரசு அறிவிக்கப்பட்டு அதற்குண்டான விவசாயிகளின் பட்டியலை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு பணிகள் முடிந்த பின்னரே அடுத்த தவணை வழங்கப்பட உள்ளது.

    ஆகவே விவசாயிகள் தங்களின் நில உடமைக்கான பட்டா, சிட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களை தங்களின் கிராமத்திற்கு சரிபார்ப்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களை ஆவணங்களுடன் சந்தித்து சரிபார்ப்பு பணியினை பதிவேற்றம் செய்த வேண்டும்.

    வெள்ளகோவில் வருவாய் கிராமத்திற்கு கார்த்தி, முத்தூர் மற்றும் வள்ளியரச்சல் வருவாய் கிராமங்களுக்கு சத்திய நாராயணன், சேனாபதிபாளையம் மற்றும் உத்தமபாளையம் கிராமங்களுக்கு லோகநாதன், புதுப்பை மற்றும் கம்பளியம்பட்டி கிராமங்களுக்கு சுரேஷ்பாபு, இலக்கமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு கிருபானந்தன், சின்னமுத்தூர் மற்றும் ஊடையும் கிராமங்களுக்கு தீனா, வீரசோழபுரம் மற்றும் பச்சாபாளையம் கிராமங்களுக்கு ஹரிதாஸ், மங்களப்பட்டி, மேட்டுப்பாளையம், பூமாண்டன்வலசு கிராமங்களுக்கு அனுசபர்மதி, ராசாத்தா வலசு, வேலம்பாளையம் கிராமங்களுக்கு கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆகவே அந்தந்த கிராம விவசாயிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களை சந்தித்து ஆவணங்கள் சரிபார்ப்பு பணியை 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×