என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதைபொருளால் ஏற்படும் ஆபத்து குறித்து இன்ஸ்பெக்டர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மேற்கொண்ட காட்சி.
பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போதை தடுப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
மடத்துக்குளம் :
போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.பள்ளிகளில் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவ்வகையில் வளரிளம் பருவத்தினரை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிதல், போதைப்பொருட்கள் பழக்கத்தில் இருந்து விடுபடச்செய்தல், வாழ்க்கைத்திறன் கல்வி என பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.அதன்படி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதை தடுப்பு குறித்து விளக்கிப் பேசினார். ஆசிரியர்கள் ஈஸ்வரன், ருத்ரமூர்த்தி, அன்னபூரணி, கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தலைமையாசிரியர் பரிமளாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.