search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் போலீஸ் வாகனங்களை கமிஷனர் ஆய்வு
    X

    திருப்பூர் மாநகர போலீசாரின் ரோந்து வாகனங்களை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு செய்தார். அப்போது போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மாநகரின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.அப்போது துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உடனிருந்தனர். 

    திருப்பூரில் போலீஸ் வாகனங்களை கமிஷனர் ஆய்வு

    • போலீசார் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.
    • அதிகமானோர் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீசாரின் ரோந்து மோட்டார் சைக்கிள், மற்றும் கார்களை பரிசோதனை செய்வதற்கான வருடாந்திர ஆய்வு இன்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

    இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு செய்தார். மேலும் ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

    அதைத்தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது போலீசார் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர். அதிகமானோர் பணி மாறுதல் கேட்டு கோரிக்கை வைத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    பின்னர் போலீசாரின் ரோந்து வாகனம் ஓட்டும் போலீசாரிடம் வாகனத்தை அரசு வாகனம் தானே என்று கருதாமல் தனது சொந்தம் வாகனத்தை போல் பராமரிக்க வேண்டும். அதேபோல் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக இயக்க வேண்டும். ஒரு சிறு விபத்து கூட ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.

    இந்த ஆய்வு நிகழ்ச்சியில் கூடுதல் துணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ராஜன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×