search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
    X

    வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

    வெள்ளகோவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

    • வியாழக்கிழமைதோறும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறுகிறது.
    • விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது.இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைேதாறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமைதோறும் சூரியகாந்தி விதை ஏலமும் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கரூர், திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இதில் வெள்ளகோவில், மூலனூர், காங்கயம், முத்தூர், கொடுமுடி, ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    தற்போது நெல் அறுவடை காலம் என்பதால் திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திடீரென நேரில் வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து எவ்வாறு இந்த நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது என்பதை தொழிலாளர்களிடம் கேட்டறிந்து நெல் சுத்தம் செய்வது, எடை போடுவது, மூடை போடுவதை செய்து காண்–பிக்க சொல்லி நேரில் பார்த்து விவரம் கேட்டறிந்தார். அப்போது ஒழுங்குமுறைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனர்.

    Next Story
    ×