search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.84.70 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    கலெக்டர் கிறிஸ்துராஜ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காட்சி.

    திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.84.70 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

    • தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.
    • திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.84.70லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்குபல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டப்பணிகள்பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்த வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் ரூ.1.52 லட்சம் மதிப்பீட்டில்கணக்கம்பாளையம் மீனாட்சி நகரில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினையும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்ரூ.6.31 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் காலணி முதல் பி.என் சாலை வரை கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.6.86 லட்சம் மதிப்பில் கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிநிறுத்துக்கூடம் அமைக்கும் பணியினையும், ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகட்டும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.2.32 லட்சம் மதிப்பீட்டில் தண்டக்காரம்பாளையம் ரோடு முதல் பெரியபள்ளம்வரை சங்கன்பிட் அமைக்கும் பணியினையும்,

    விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்கணக்கம்பாளையம் பொன்விழா நகரில் ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.41.25லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், கனிமங்கள் மற்றும்குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.0.79 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் சமையலறை பழுதுபார்க்கும் பணிகளையும், பள்ளி உள்கட்டமைப்புமேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.08 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டடம் பழுதுபார்க்கும் பணிகளையும்,

    நாதம்பாளையத்தில் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.11லட்சம்மதிப்பீட்டில் நாதம்பாளையம் விநாயகர் கோவில் முதல் சமத்துவபுரம் வரை நடைபெற்றுவரும் சாலை பணிகளையும், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் வாவிபாளையம் ரோடுமுதல் விக்னேஷ்வரா நகர் பிரிவு வரை நடைபெற்று வரும் சாலை பணிகளையும் எனமொத்தம் ரூ.84.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வுமேற்கொள்ளப்பட்டன. திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள்பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன்,திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதி, ஸ்ரீதர்,உதவிப் பொறியாளர் கற்பகம், மேற்பார்வையாளர் லதா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×