என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாக்கடை வாய்க்காலில் அடைப்பு - கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி
  X

  தேங்கிய நீர் சாலையில் வழிந்தோடுவதை படத்தில் காணலாம்.

  சாக்கடை வாய்க்காலில் அடைப்பு - கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல்லடம் செல்லும் சாலை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும்.
  • சில மாதங்களாக சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

  வீரபாண்டி :

  திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும். அதிக வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றன. திருப்பூர் மாநகராட்சி 53 -வது வார்டுக்குட்பட்ட இந்த சாலையில் நொச்சிப்பாளையம் பிரிவு, மூலக்கடை அருகே சாக்கடை நீர் செல்லும் வாய்க்கால் அமைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் சாக்கடை அடைப்பினால் தேங்கிய நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாக்கடை நீரில் செல்ல வேண்டியுள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

  Next Story
  ×