search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதியார் பல்கலைக்கழக  தொலைதூர கல்வியில்  பி.எட்., படிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்
    X

    கோப்பு படம்.

    பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பி.எட்., படிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்

    • பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
    • குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்விமுறையில் பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.சேர்க்கை செயல்பாடுகள் அரசு மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் நடைபெறும்.இரண்டாண்டு, ஆசிரியர் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.

    2 ஆண்டுகள் முழு நேரம் தற்காலிகம் அல்லது நிரந்தர அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில்,ஆசிரியராக பணியாற்றி இருக்கவேண்டும்.இன வாரியாக பட்டப்படிப்பில், குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    கல்லூரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது.

    மேலும் விபரங்களை, https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.விண்ணப்பங்களை அக்டோபர் 5-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×