என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸார் இந்தி மொழியில் விழிப்புணர்வு மேற்கொண்ட காட்சி.
இந்தி மொழியில் பேசி வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
- வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.
- தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.
திருப்பூர் :
ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.அவர்கள் கூறும் போது, தவறான வீடியோக்கள் மூலம் அனைவரும் அச்சமடைந்ததாகவும் தற்போது அவை அனைத்தும் பொய்யானவை என தெரியவந்துள்ளது. எனவே பயமின்றி மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளோம். தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.
மேலும் ெரயில்வே காவல்துறையினர், புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு இந்தி மொழியில் பேசி நீங்கள் பாதுகாப்பாக உள்ளனர். எந்த அச்சமும் தேவையில்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Next Story






