என் மலர்
உள்ளூர் செய்திகள்

மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட காட்சி.
சிவன்மலையில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு
- கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சியில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சிவன்மலை கிராமத்தில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப–பட்டது.
நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ராகவேந்திரன், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி , துணை தலைவர் சண்முகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், காங்கயம் அரசு கலை கல்லூரி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story