search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    28 நாளில் தண்டனை பெற்று கொடுத்த போலீஸ் தனிப்படையினருக்கு பாராட்டு
    X

    தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி அளித்து பாராட்டிய போது எடுத்த படம்.

    28 நாளில் தண்டனை பெற்று கொடுத்த போலீஸ் தனிப்படையினருக்கு பாராட்டு

    • இருசக்கர வாகனத்தை கடந்த மே மாதம் 14-ந் தேதி இரவு மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றதாக புகார் அளித்தார்.
    • குறுகிய காலத்தில் புலன் விசாரணை முடித்து, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் குறிஞ்சிநகர் விரிவு 3-வது வீதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 26). இவர் தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை கடந்த மே மாதம் 14-ந் தேதி இரவு மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றதாக தெற்கு போலீஸ் நிலையத்தில் மறுநாள் புகார் அளித்தார்.

    அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டனூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21), அனுபிள்ளை தாங்கி பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (20) ஆகியோரை கடந்த மாதம் 16-ந் தேதி கைது செய்து மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.இந்த வழக்கில் குறுகிய காலத்தில் புலன் விசாரணை முடித்து, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட 28 நாளில் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷ், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2 மாஜிஸ்திரேட்டு பழனிக்குமார் உத்தரவிட்டார்.

    குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து கோர்ட்டில் தண்டனை பெற்றுக்கொடுத்த போலீஸ் தனிப்படையினரான சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், கோர்ட்டு பணி முதல்நிலை காவலர் நாகராஜ் குட்டி, பெண் காவலர் மணிமேகலை, முதல்நிலை காவலர் அனித்ராஜ் ஆகியோருக்கு வெகுமதி வழங்கி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    Next Story
    ×