என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ஆ.ராசாவின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும் - பாராளுமன்ற சபாநாயகருக்கு சிவசேனா கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ஆ.ராசாவின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும் - பாராளுமன்ற சபாநாயகருக்கு சிவசேனா கோரிக்கை

    • சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
    • இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பொது நிகழ்ச்சிகளிலும் அரசியல் மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் தொடர்ந்து இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை குறைந்தது 3மாதம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாராளுமன்ற சபாநாயகரை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×