search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    கோவில் கோபுர கலசங்களுக்கு பங்காரு அடிகளார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த காட்சி. கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

    உடுமலையில் ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • 17ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • ஆதிபராசக்தி அம்மன் சிலையை மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடந்தது.

    உடுமலை :

    உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லேஅவுட் சர்தார் வீதியில் கட்டப்பட்டுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. கடந்த 17ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை 4 மணிக்கு குருபூஜை ,4:30 மணிக்கு கோபுர கலசம் ஸ்தாபிதம், ஆதிபராசக்தி அம்மன் சிலையை மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7 .15 மணிக்கு சக்தி கொடியேற்றுதல், 11:30 மணிக்கு முதல் கால வேள்வி பூைஜ, தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி பூஜை, அஷ்டபந்தனம் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5:30 மணிக்கு 3ம் கால வேள்வி பூஜை ,காலை 9 .15 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாருக்கு பாத பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கோபுர கலசங்களுக்கு பங்காரு அடிகளார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க உடுமலை தலைவர் ருக்மணி அம்மாள், செயலாளர் கிருஷ்ணசாமி ,பொருளாளர் சிவகாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    கும்பாபிஷேகத்தில் உடுமலை நகர தி.மு.க. செயலாளர் சி.வேலுச்சாமி ,உடுமலை நகர்மன்ற தலைவர் மத்தின் ,மடத்துக்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உடுமலை டி.எஸ்.பி.,தேன்மொழி வேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் காவலர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×