என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பல்லடம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
- காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள கரடிவாவி தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்த பருவாய் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(வயது 42), துரைசாமி(47),ரமேஷ், (40), பாலன்(52), பழனிசாமி (42) ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.1,440யை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






