search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சியில் 21 செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - 25-ந் தேதி நேர்காணல் நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாநகராட்சியில் 21 செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - 25-ந் தேதி நேர்காணல் நடக்கிறது

    • மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு மாநகர நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி 21 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். பி.எஸ்.சி. நர்சிங், துணை நர்சிங் படிப்பு, டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படும்.

    1 மருந்தாளுனர், 3 ஆய்வக நுட்புநர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். மருந்தாளுனர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம், ஆய்வக நுட்புநர் பணிக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக வருகிற 25-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2240153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நேர்காணலில் தகுதி பெற்று காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நபர்களை 6 மாத காலத்துக்குள் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக பணி நியமனம் செய்யப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×