என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் அறையிலிருந்து வெளிநடப்பு செய்த காட்சி.
நகராட்சி கூட்டத்தில் 10 கவுன்சிலர்கள் எதிர்ப்பால் தீர்மானங்கள் ரத்து
பல்லடம்:
பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆணையாளர் முத்துசாமி மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள் ,அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியதுமே கவுன்சிலர்கள் ஏன் ரகசிய கூட்டம் போல் நடத்துகின்றனர். பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் இருந்தால் தானே பொதுமக்கள் பிரச்சனை குறித்து என்ன பேசுகிறோம் , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது மக்களுக்கு தெரிய வரும். அதை விடுத்து ரகசியமாக கூட்டம் நடத்துவது தேவையா என ஆட்சேபித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 48 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டதாகவும் இதற்கு 3,7,10,11,12,13,17, ஆகிய 7 வார்டு கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், தீர்மானங்களை எதிர்த்து1,2,4,6,8,9,14,15,16,18, ஆகிய 10 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.
இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.