என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்ற போது எடுத்த படம்.
பல்லடம் கோவில்களில் தை அமாவாசை வழிபாடு
- சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்படி பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில்,அங்காளம்மன் கோவில், தண்டபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story






