என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் ஆடை ஏற்றுமதியாளரை காரில் கடத்திய கும்பல்
- பலமுறை பணம் கேட்டும் அப்துல் முனாப் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
- தலைமறைவான முபாரக், குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாஸ்கோ நகரை சோ்ந்தவர் அப்துல் முனாப்(வயது 45). தொழிலதிபரான இவர் பனியன் துணிகள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மங்கலத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் சலாவுதீன், குமார் ஆகியோரிடமிருந்து அப்துல் முனாப் பனியன் துணிகள் வாங்கியுள்ளார்.
பனியன் துணிகள் வாங்கியதற்காக தொகை ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். பலமுறை பணம் கேட்டும் அப்துல் முனாப் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த நிைலயில் அப்துல் முனாப்பை மாஸ்கோ நகரில் இருந்து காரில் சலாவுதீன்(40), முபாரக்(40), குமார்(38) ஆகிய 3 பேரும் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் போில் வடக்கு போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அப்துல் முனாப்பை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் சலாவுதீனை கைது செய்தனர். தலைமறைவான முபாரக், குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






