என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திங்களூர் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- 4-ம் கால யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த திங்களூர் கிராமத்தில் பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் திருப்பணிகள் தொடங்கி முடிந்தது.
இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேக விழா முதல் யாகசாலை கலா கர்ஷசனம் அக்னி மிதனம் அக்னி பிராணாயணம் யாகசாலை பிரவேசம் பூர்ணாஹூதியுடன் பூஜை துவங்கியது.
நேற்று காலை நான்காம் யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடை பெற்று மஹாதீபாரதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து வேதபாராயணங்கள் நாதஸ்வர இன்னிசை கச்சேரிகள் முழங்க புறப்பட்டு சன்னதியின் பிரகாரங்கள் உலா வந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள், தாயார் சன்னதி, ராஜகோபுரம் கலசங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலர் சக்திவேல், ஆய்வாளர் குணசுந்தரி, கணக்கர் செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள், சேவா ர்திகள் செய்திருந்தனர்.






