என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர்கள் கைது
- பொதுமக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பட்டாகத்தியை பறிமுதல் செய்ததுடன் மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கடவாசல் டாஸ்மாக் கடை அருகே சிலர் நின்றுக்கொண்டு அப்பகுதி வழியாக செல்வோரை கத்தியை காட்டி மிரட்டு வதாக புதுப்ப ட்டினம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை மிரட்டிய கடவாசல் சிலம்பரசன் (வயது 21), திருக்கருக்காவூர் வசந்த் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களி டமிருந்து பட்டாகத்தியை பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
Next Story






