search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாப்பிள்ளையூரணி  ஊராட்சி பூங்காவில் கனிமொழி எம்.பி. ஆய்வு
    X

    பூங்காவில் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்த காட்சி.

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி பூங்காவில் கனிமொழி எம்.பி. ஆய்வு

    • மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காவை கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.
    • புதிய செடிகளின் பெயர்களையும், இலைகளையும் பார்த்து பல்வேறு விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பூங்காவை கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட பிரதிநிதி சப்பானிமுத்து,

    ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், தர்மலிங்கம், மற்றும் நிர்வாகிகள்உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அவர், பூங்காவை சுற்றிப்பார்த்தார். அங்கு இருந்த புதிய செடிகளின் பெயர்களையும், இலைகளையும் பார்த்து பல்வேறு விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டார்.

    பின்னர் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் மரக்கன்று–களை பராமரிக்கப்படும் முறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து அங்கு கனிமொழி எம்.பி.மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜன்,

    கூட்டுடன்காடு ஹரி பாலகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் இளையராஜா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×